Vijay - Favicon

உலகிலேயே பெரிய பரிசு தொகை..! அசர வைத்த லொட்டரி நிறுவனம் – அடிக்கப்போகும் ஜாக்பாட்


பரிசு

அமெரிக்காவின் முதன்மையான பவர் பால் லொட்டரியில் மூன்று மாதங்களுக்கும் மேலாக யாரும் வெற்றி பெறாத நிலையில், இந்த வார இறுதி குலுக்கலில் இதுவரை இல்லாத அளவுக்கு உலகிலேயே பெரிய பரிசு தொகை அறிவிக்கப்பட்டது.



இப்போது விற்பனையில் இருக்கும் சனிக்கிழமையன்று வெளியான பவர்பால் ஜாக்பாக்ட் லொட்டரி விளம்பரத்தில் முந்தைய பரிசானது 1.6 பில்லியன் அமெரிக்க டொலராக (13 ஆயிரம் கோடி இந்திய ரூபாய்) அறிவிக்கப்பட்டிருந்தது.


இதற்கு முன்பு 2016ஆம் ஆண்டு பவர் பால் லொட்டரி பரிசாக அதுவரை இல்லாத அளவுக்கு 1.59 பில்லியன் டொலர் பரிசுத் தொகையை மூன்று போட்டியாளர்கள் பகிர்ந்து கொண்டனர்.

லொட்டரியில் வெற்றி பெறும் வாய்ப்பு

உலகிலேயே பெரிய பரிசு தொகை..! அசர வைத்த லொட்டரி நிறுவனம் - அடிக்கப்போகும் ஜாக்பாட் | 13000 Crores Prize Lottery Surprised Win 37 Times

292 மில்லியனில் ஒருவருக்குத்தான் லொட்டரியில் வெற்றி பெறும் வாய்ப்பு இருப்பதாக பவர் பால் நிறுவனம் கூறுகிறது.


இந்த விளையாட்டு கடந்த 1992ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. அமெரிக்காவின் 50 மாநிலங்களில் தலைநகர் வாஷிங்டன், மற்றும் புவேர்ட்டோ ரிக்கோ மற்றும் விர்ஜின் தீவுகள் ஆகிய அமெரிக்க பிரதேசங்கள் உள்ளிட்ட 45 மாநிலங்களில் இது நடத்தப்படுகிறது.


பரிசுக்கான golden ticket என்ற டிக்கெட்டை வைத்திருப்பவருக்கு முழு தொகையும் ஆண்டுக்கு ஒருமுறை என்ற முறையில் 30 ஆண்டுகளுக்கு வழங்கப்படும்.


எனினும் அனைத்து வெற்றியாளர்களும் முன் பண விருப்பத்தையும் தேர்வு செய்யலாம்.

அப்போது அவர்களுக்கு ஒரு குறிப்பிட்ட அளவு குறைந்த தொகை மொத்தமாக வழங்கப்படும்.

782.4 மில்லியன் டொலர் 

உலகிலேயே பெரிய பரிசு தொகை..! அசர வைத்த லொட்டரி நிறுவனம் - அடிக்கப்போகும் ஜாக்பாட் | 13000 Crores Prize Lottery Surprised Win 37 Times

சனிக்கிழமை இரவுக்கான குலுக்கல் பரிசு 782.4 மில்லியன் டொலர் என மதிப்பிடப்பட்டுள்ளது.



ஓகஸ்ட் மாதத்தொடக்கத்தில் நடந்த வெற்றிகரமான ஜாக்பாக்ட்டை விடவும் இது ஒரு பெரிய முன்னெடுப்பாகும்.

அப்போது பென்சில்வேனியாவில் டிக்கெட் வாங்குபவர் ஒப்பீட்டளவில் மிதமான அளவில் 206.9 மில்லியன் டொலர் வெற்றி பெற வேண்டியிருந்தது.


வரலாற்றில் இதுவரை இல்லாத அளவுக்கு கடந்த 2016ஆம் ஆண்டு மூன்று வெவ்வேறு அமெரிக்கா மாநிலங்களைச் சேர்ந்த பரிசுக்கான டிக்கெட் வைத்திருந்த மூன்று பேர் பரிசை பகிர்ந்து கொண்டனர்.

வெற்றிபெற்றோர்

உலகிலேயே பெரிய பரிசு தொகை..! அசர வைத்த லொட்டரி நிறுவனம் - அடிக்கப்போகும் ஜாக்பாட் | 13000 Crores Prize Lottery Surprised Win 37 Times

வெற்றிபெற்ற டென்னசீ மாநிலத்தை சேர்ந்த ஜான் மற்றும் லிசா ராபின்சன், புளோரிடாவைச் சேர்ந்த மொரீன் ஸ்மித் மற்றும் டேவிட் கால்ட்ஸ்மிட், மற்றும் கலிபோர்னியாவைச் சேர்ந்த மார்வின் மற்றும் மே அகோஸ்டா ஆகியோர் மொத்த தொகை விருப்பத்தின் பேரில் 327.8மில்லியன் டொலர் பெற்றனர்.


ராபின்சன்கள் இருவரும் பரிசுக்கான கோல்டன் டிக்கெட் மற்றும் இதர மூன்று டிக்கெட்களை உள்ளூர் கடையில் வாங்கியிருந்தனர். அப்போது அவர்கள் அளித்த பேட்டியில், “மொத்தமாக பரிசை பெற விருப்பம் தெரிவித்தோம். ஏனெனில் நாளை என்ன நடக்கும் என்பதற்கு உத்தரவாதமில்லை” என்று கூறியிருந்தனர்.


மொரீன் ஸ்மித் மற்றும் டேவிட் கால்ட்ஸ்மிட் ஆகியோர், தாங்கள் சீக்கிரமாக ஓய்வு பெற உள்ளதாகவும், மசாஜ் செய்வதற்கும், பழைய வாகனத்தை மாற்றுவதற்கும் இந்தப் பணத்தை செலவழிக்க இருப்பதாக கூறினர்.



Source link

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *