.jpg)
அதில் ஒரு மாணவன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போதிலும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளான்.
இன்று (08) செவ்வாய்க்கிழமை பகல் 1.30 மணிக்கு இடம்பெற்றுள்ளதாக தெரிவித்த திருக்கோவில் பொலிஸார், தம்பிலுவில் ஏ.பி.சி வீதியைச் சேர்ந்த 13 வயதுடைய சிவபாலன் கிசாஷந் என்ற மாணவனே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
இதுபற்றி தெரியவருவதாவது ,
சகமாணவனின் கை அந்த பெயின்றில் பட்டதுடன் கீறப்பட்டு இருந்ததும் அழிந்துவிட்டது. இதனையடுத்தே இவ்விருவருக்கும் இடையில் கைகலப்பு ஏற்பட்டுள்ளது. மாணவனை தாக்கிய சக மாணவன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் .
உயிரிழந்த மாணவனின் சடலத்தை பிரேத பரிசோதனைக்கு உட்படுத்த நடவடிக்கை மேற்கொண்டுவருவதாக தெரிவித்த திருக்கோவில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுவருகின்றனர்.