Vijay - Favicon

காவல்துறை அதிகாரியின் வங்கி கணக்கில் விழுந்த 10 கோடி..! ஒரு நிமிட கோடீஸ்வரர்


பாகிஸ்தானில் கராச்சி நகரில் உள்ள காவல் நிலையத்தில் விசாரணை அதிகாரி ஆமீர் கோபங் வங்கி கணக்கில் சம்பளத்துடன் அடையாளம் தெரியாத வழியில் இருந்து ரூ.10 கோடி விழுந்துள்ளது.



ஆனால், இதனை பற்றி அவர் அறியவில்லை. திடீரென வங்கியிடம் இருந்து வந்த தொலைபேசி அழைப்பை எடுத்து பேசியவரிடம்,

உங்களது வங்கி கணக்கில் ரூ.10 கோடி விழுந்துள்ளது என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனால், மகிழ்ச்சியில் அந்த அதிகாரி திக்கு முக்காடி போனார்.

அதிரடியாக வங்கி கணக்கு முடக்கம்

காவல்துறை அதிகாரியின் வங்கி கணக்கில் விழுந்த 10 கோடி..! ஒரு நிமிட கோடீஸ்வரர் | 10 Crore In Bank Account Along Salary Lucky Person

இதுபற்றி கோபங் கூறுகையில்,

இவ்வளவு பணம் எனக்கு கிடைத்து இருக்கிறது என பார்த்து அதிர்ச்சி அடைந்தேன்.

ஏனெனில், எனது கணக்கில் இதுவரை சில ஆயிரங்களை தவிர வேறு எதனையும் நான் பார்த்தது இல்லை என கூறியுள்ளார்.

எனினும், அவரது மகிழ்ச்சி சிறிது ஒரு நிமிடம் கூட நீடிக்கவில்லை.


உடனடியாக தொலைபேசி இணைப்பு துண்டிக்கப்பட்ட பின்பு, கோபங் ஏதேனும் செயல்படுவதற்கு முன் வங்கி அதிரடியாக அவரது கணக்கை முடக்கியது.

அவரது ஏ.டி.எம். அட்டையையும் பணம் எடுக்க முடியாதபடிக்கு முடக்கி விட்டது.

விசாரணை 

காவல்துறை அதிகாரியின் வங்கி கணக்கில் விழுந்த 10 கோடி..! ஒரு நிமிட கோடீஸ்வரர் | 10 Crore In Bank Account Along Salary Lucky Person

காவல் அதிகாரியின் வங்கி கணக்கில் எப்படி, எங்கிருந்து இவ்வளவு பணம் வந்தது என விசாரணை தொடங்கியுள்ளது.


அதேவேளை இதேபோன்ற சம்பவம் பாகிஸ்தானின் லர்கானா மற்றும் சுக்கூர் மாவட்டங்களிலும் நடந்து உள்ளது ஆச்சரியம் ஏற்படுத்தி இருக்கிறது.



லர்கானாவில் 3 காவல் அதிகாரியின் வங்கி கணக்கிலும், சுக்கூரில் ஒரு காவல் அதிகாரியின் வங்கி கணக்கிலும் ரூ.5 கோடி அளவுக்கு பணம் விழுந்துள்ளதாக கூறப்படுகின்றமை ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது



Source link

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *