ஹோல்புறூக் நகரத்தில் Copricorn சர்வதேச பாடசாலை ஆரம்ப நிகழ்வு 18.03.2023 அன்று பாடசாலையின் அதிபர் ஜெயஷக்திவாணியின் தலைமையில் இடம்பெற்றது.
நிகழ்வில் அக்கரப்பத்தனை பொலீஸ் நிலையத்தின் தலைமை அதிகாரி மற்றும் மத குருமார்கள் , அக்கரப்பத்தனை பிரதேசத்தின் பாடசாலை அதிபர்கள் ,ஆசிரியர்கள் மற்றும் கிராம உத்தியோகத்தர்கள் வைத்தியர்கள், நகர வர்த்தகர்கள், பெற்றார்கள் ,மாணவர்கள் மற்றும் நலன் விரும்பிகள் என பலரும் கலந்து கொண்டனர்.
குறித்த ஆரம்ப விழாவானது அக்கரப்பத்தனை பொலீஸ் மைதானத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த அதே வேளை நிகழ்வினில் முதலாவது அம்சமாக அதிதிகளை வரவேற்கும் நிகழ்வானது இடம்பெற்றது. இந் நிகழ்வினூடாக அதிதிகள் வாத்திய கருவிகள் இசைக்கப்பட்டு நிகழ்விடத்திற்கு அழைத்துவரப்பட்டார்கள். தொடர்ந்து தேசிய கொடியினை அக்கரப்பத்தனை பொலீஸ் பொறுப்பதிகாரி ஏற்றி வைத்ததோடு தேசிய கீதம் இசைக்கப்பட்டது. தொடர்ந்து பாடசாலையின் கொடியினை பாடசாலையின் அதிபர் மற்றும் நிர்வாக குழு தலைவர் ஆகியோர் இணைந்து ஏற்றி வைத்தனர்.அதனை தொடர்ந்து பாடசாலை கீதமானது இசைக்கப்பட்டு, மங்கள குத்து விளக்கேற்றும் நிகழ்வோடு மத குருமார்களின் ஆசியுரையும் வாழ்த்துரையும் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கதாகும்.
மேலும் பாடசாலையின் மாணவர்களின் வரவேற்பு நடனம் மற்றும் பாடசாலையின் சிரேஷ்ட மாணவரினால் வரவேற்புரையும் நிகழ்த்தப்பட்டது.
நிகழ்வில் தொடர்ச்சியாக பாடசாலையின் பெயர் உத்தியோகப்பூர்வமாக அறிமுகப்படுத்தப்பட்டதை தொடர்ந்து ,பாடசாலையின் மகுட வாசகமும் அறிமுகப்படுத்தப்பட்டது. அத்தோடு மாணவ தலைவர்களுக்கா சின்னங்கள் இதன் போது வழங்கப்பட்டு ,மாணவ தலைவர்கள் சத்தியப்பிரமாணம் செய்யும் நிகழ்வு இடம்பெற்றது.
இறுதியாக பாடசாலை அதிபரின் சிறப்புரையோடு நன்றியுரை நிகழ்த்தப்பட்டு தேசிய கீதத்தோடு இந் நிகழ்வு இனிதே நிறைவு பெற்றமை குறிப்பிடத்தக்கதாகும்.
கவியுகன்