ஹட்டன் பன்மூர் பாடசாலையின் வருடாந்த பரிசளிப்பு விழா நேற்று (09/11/222) பாடசாலையின் பிரதான மண்டபத்தில் அதிபரின் தலைமையில் இடம்பெற்றது.
குறித்த நிகழ்வை பாடசாலை ஆசிரியர்கள் உட்பட பழையமாணவர்களும் பாடசாலையின் அபிவிருத்தி சங்க உறுப்பினர்களும் இணைந்து ஒழுங்கு செய்திருந்தனர்.
நிகழ்வில் பெற்றோர்கள் ,மாணவர்கள் ,ஆசிரியர்கள் ,பழையமாணவர்கள் என பலரும் கலந்து சிறப்பித்தனர்.
நிகழ்வுக்கு பூரண ஆதரவு வழங்கிய பன்மூர் பாடசாலையின் பழைய மாணவர்களுக்கு ,பழைய மாணவர் சங்கத்தின் செயலாளர் என்ற வகையில் நன்றிகளை தெரிவிப்பதாக பாடசாலையின் பழைய மாணவர் சங்கத்தின் செயலாளர் சிவனு சுரேஷ் தெரிவித்தார்.