Colombo (News 1st) வெயாங்கொடை ரயில் நிலையத்திற்கு அருகில் ரயிலில் மோதி இரண்டு இளைஞர்கள் உயிரிழந்துள்ளனர். பதுளை நோக்கி இன்று காலை 5.45 மணியளவில் பயணித்த நகர்சேர் கடுகதி ரயிலில் மோதி இவர்கள் இருவரும் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் கூறினர். அவிஸ்க, திலங்க எனும் 18 மற்றும் 21 வயதான இளைஞர்களே உயிரிழந்துள்ளனர். நண்பர்களான குறித்த இருவரும் தண்டவாளத்தை அண்மித்த பகுதியில் வசிப்பவர்கள் என நியூஸ்ஃபெஸ்டின் பிராந்திய செய்தியாளர் குறிப்பிட்டார்.
The post வெயாங்கொடையில் ரயிலில் மோதி இளைஞர்கள் இருவர் பலி appeared first on Sri Lanka Tamil News – Newsfirst | News1st | newsfirst.lk | Breaking.