Colombo (News 1st) எதிர்வரும் சில மாதங்களில் வரித் திருத்தங்களை மேற்கொள்ளவுள்ளதாக பிரதமர் தினேஷ் குணவர்தன தெரிவித்தார்.
நியூஸ்ஃபெஸ்ட்டிற்கு வழங்கிய விசேட செவ்வியிலேயே அவர் இதனை கூறினார்.
இலங்கைக்கான கடனுதவிக்கு நிறைவேற்றுக்குழு அனுமதியளித்துள்ள நிலையில், எதிர்வரும் நாட்களில் பல மறுசீரமைப்புத் திட்டங்களை கொண்டு வருவதற்கும் தீர்மானித்துள்ளதாக பிரதமர் கூறியுள்ளார்.