ஜேர்மனியில் தயாரிக்கப்பட்ட GR 14 ரக ரிவோல்வர் துப்பாக்கியை தன் கைவசம் வைத்திருந்த குற்றச்சாட்டில் லுணுகலை கிவுலேகம பகுதியைச் சேர்ந்த 43 வயதுடைய நபர் ஒருவரும் லுணுகலை பல்லேபங்குவ பகுதியை சேர்ந்த 38 வயதுடைய நபர் ஒருவரும் நேற்றைய தினம் லுணுகலை பொலிஸாரினால் கைது செய்யப்பட்டிருந்தனர். குறித்த இரு சந்தேகநபர்களையும் பதுளை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்திய போது எதிர்வரும் 23 ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
குறித்த துப்பாக்கியை சட்டவிரோதமாக வைத்திருந்த குற்றச்சாட்டில் தொடர்புடைய லுணுகலை உடபங்குவ பகுதியை சேர்ந்த 28 வயதுடைய மேலும் ஒரு சந்தேக நபரை லுணுகலை பொலிஸார் இன்றைய தினம் கைது செய்துள்ளனர்.
குறித்த சந்தேக நபரை நாளைய தினம் பசறை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக லுணுகலை பொலிஸார் தெரிவித்தனர்.
ராமு தனராஜா