சென்றெகுலர்ஸ் கங்கா இளைஞர் கழகம் சித்திரை புத்தாண்டை வரவேற்கும் முகமாக ஏற்பாடு செய்திருக்கும் புத்தாண்டு விழாவில் இன்றைய தினம் தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டுக்களில் ஒன்றான கபடி சுற்றுப்போட்டி இடம்பெற்றது.
சென்றெகுலர்ஸ் தோட்ட வரலாற்றில் முதன்முறையாக இடம்பெறும் இந்தப்போட்டியின் ஆரம்பத்தில் அதனை நினைவுறுத்தும் வகையில் நினைவு சின்னம் வைக்கப்பட்டு அதில் கையொப்பமிடும் நிகழ்வு இடம்பெற்றது.
நினைவு சின்னத்தில் நிகழ்வுக்கு பிரதம அதிதியாக கலந்து சிறப்பித்த நு/லோவர்கிறன்லி தவி அதிபர்
K.பாலகிருஸ்ணன் அவர்களும்
போட்டியின் மத்தியஸ்தராக கலந்து சிறப்பித்த நுவரெலிய கபடி சம்மேளனத்தின் தலைவர் ஆசிரியர்
வேதநாயகம் சுதர்சனன் அவர்களும் உத்தியோகபூர்வமாக தமது கையொப்பத்தை இட்டு போட்டியை ஆரம்பித்து வைத்தனர்.
தொடர்ந்து விநோதயம் அறநெறி கல்வியகத்தின் பொறுப்பாசிரியர்
அ.ரெ.அருட்செல்வம்,கங்கா இளைஞர் கழகத்தின் ஆலோசகர்
K.சுரேஸ்குமார்,விளையாட்டு குழு தலைவர் S.ஹிந்துஜன்,
கங்கா விளையாட்டு கழகத்தின்
சார்பில் திரு.S.மொரிஸ்,திரு.P.பெரி யசாமி,
சென்றெகுலர்ஸ் சிறுவர் அபிவிருத்தி நிலையத்தின் உத்தியோகத்தர் திருமதி சுந்தரி,
சமூக ஆர்வலர்ஃ இரா.விஜயகுமாரி ஆகியோரும் தமது கையொப்பங்களை இட்டனர்.
போட்டியில் 4 மகளிர் அணிகளும் இரண்டு ஆடவர் அணியும் பங்கு கொண்டு தமது திறமைகளை வெளிப்படுத்தி இருந்தனர்.
மேற்படி போட்டி நிகழ்விற்கு அனுசரனையை
விநோதயம் அறநெறி கல்வியகம்
மற்றும் சென்றெகுலர்ஸ கங்கா விளையாட்டு கழகமும் வழங்கி சிறப்பித்து இருந்தது.
(அ.ரெ.அருட்செல்வம்)