Vijay - Favicon

ரஷ்ய பிடியிலிருந்து மீட்கப்பட்ட இலங்கை மாணவர்களின் நிழற்படங்கள் வௌியாகின




Colombo (News 1st) உக்ரைனின் இசியும் நகரில் ரஷ்ய பிடியிலிருந்து மீட்கப்பட்டதாகக் கூறப்படும் 07 இலங்கை மாணவர்களின் நிழற்படங்களை உக்ரைன் ஊடகவியலாளர் ஒருவர் தமது ட்விட்டர் தளத்தில் பதிவிட்டுள்ளார்.

இவர்களுள் பெண்ணொருவரும் 6 ஆண்களும் அடங்குவதாக குறித்த ஊடகவியலாளர் பதிவிட்டுள்ளார். 

அவர்கள் 20 – 40 வயதிற்கு இடைப்பட்டவர்கள் எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

உக்ரைனின் குப்யன்ஸ்க் பிரதேசத்திற்குச் சென்ற 3 வாரங்களில், குப்பியன்ஸிலிருந்து கார்கிவ் நோக்கி செல்ல முயன்ற போது இவர்கள் ரஷ்யர்களின் பிடியில் சிக்கியதாக அந்த ஊடகவியலாளரின் ட்விட்டர் பதிவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அதன் பின்னர் இந்த 07 மாணவர்களும் அடையாளம் தெரியாத பகுதியில் தடுத்து வைக்கப்பட்டிருந்ததாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.





Source link

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *