ரஷ்யாவிலுள்ள பாடசாலை ஒன்றில் நடத்தப்பட்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் குறைந்தது 13 பேர் பலியாகியுள்ளதாக அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதன்போது மேலும் பலர் காயமடைந்துள்ளனர்.
ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பாதுகாப்பு கடமையில் ஈடுபட்டிருந்தவர்களே சம்பவத்தில் பலியாகியுள்ளனர்.
துப்பாக்கிப் பிரயோகத்திற்கான காரணம் தௌிவாக தெரியவில்லை என அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.