ரஷ்ய நாட்டு பிரஜை ஒருவர் எல்ல பகுதியில் உள்ள சிறிய சிறிபாத மலைக்கு சென்று மீண்டும் திரும்பி வருகையில் குறித்த நபருக்கு நெஞ்சு வலி ஏற்பட்டுள்ளது.
38 வயதுடைய குறித்த ரஷ்யன் நாட்டு பிரஜையை தெமோதர வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட பின்னர் வைத்தியசாலையில் குறித்த நபர் மரணித்துள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
குறித்த நபர் மாரடைப்பின் காரணமாக இறந்திருக்கலாம் என வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. மேலதிக விசாரணைகளை எல்ல பொலிஸ் சுற்றுலா பிரிவினர் மேற்கொண்டு வருகின்றனர்.
ராமு தனராஜா