Vijay - Favicon

ரயில் கழிவறையில் சிசுவை கைவிட்டுச் சென்ற பெற்றோர் பிணையில் விடுவிப்பு




Colombo (News 1st) கொழும்பு கோட்டையில் இருந்து மட்டக்களப்பு நோக்கி பயணிக்கவிருந்த மீனகயா ரயிலின் கழிவறையில் சிசுவொன்றை கைவிட்டுச் சென்ற பெற்றோர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

இது தொடர்பான வழக்கு விசாரணை இன்று கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் இடம்பெற்ற போது பிணை வழங்கப்பட்டது.

இதற்கமைய, சிசுவின் பெற்றோர் தலா 05 இலட்சம் ரூபா பெறுமதியான இரண்டு சரீரப் பிணைகளில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

பண்டாரவளை நன்னடத்தை அதிகாரி விடுத்த கோரிக்கையின் பிரகாரம், சிசுவின் போசாக்கு தேவைகளை பூர்த்தி செய்வதை கருத்தில் கொண்டு அதனை பெற்றோரிடம் ஒப்படைக்குமாறும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

பண்டாரவளை நன்னடத்தை அதிகாரியின் கடுமையான கண்காணிப்பின் கீழ் சிசுவை குறித்த பெற்றோரிடம் ஒப்படைக்குமாறு நீதிமன்றம் மேலும் உத்தரவிட்டுள்ளது.

25 வயதான தாயும் 26 வயதான தந்தையுமே இன்று பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

இவர்கள் திருமணமாகாதவர்கள் என்பதும் விசாரணைகளில் தெரியவந்தது. 

 





Source link

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *