Vijay - Favicon

யாழ். கொழும்புத்துறை அருள்மிகு மன்றுளாடும் விநாயகப் பெருமான் திருக்கோயில்


வடமாகாணம்- யாழ்ப்பாண மாவட்டம்- யாழ்ப்பாணம், கொழும்புத்துறை அருள்மிகு மன்றுளாடும் விநாயகப் பெருமான் திருக்கோயில்

கொழும்புத்துறை நற்பதியில் கோயில் கொண்ட விநாயகரே
கொடுமை களைந்தெம்மைக் காவல் செய்ய வாருமைய்யா
அல்லல் அகற்றியெமக்கருள் நல்கும் விநாயகரே
அறநெறியே நிலைத்துவிட அருள்தரவே வாருமைய்யா

இலந்தைக் குளமருகில் இருந்தருளும் விநாயகரே
இலக்கின்றித் தவிக்குமெம்மை வழிநடத்த வாருமைய்யா
அறிவுதந்து ஆற்றல் தந்து அரவணைக்கும் விநாயகரே
அருகிருந்து காவல் செய்து அணைத்தருள வாருமைய்யா

மன்றுளாடும் பெருமான் என்ற நாமம் கொண்ட விநாயகரே
மலரடியைப் போற்றி நிற்கும் எமக்கருள வாருமைய்யா
கல்விச் செல்வம் வழங்கும் அகம் அருகு கொண்ட விநாயகரே
காத்து வழிநடத்தி எம்மை வழிநடத்த வாருமைய்யா

யோகர் என்னும் சித்தர் வாழ்ந்த பதி அமர்ந்தருளும் விநாயகரே
யோக்கியமாய் நாம் வாழ வழிதரவே வாருமைய்யா
துன்பம் களைபவனே துயர் போக்கும் விநாயகரே
தூயவள வாழ்வு தர விரைந்து நீ வாருமைய்யா

உன்னருளால் உலகமெல்லாம் உய்ய வேண்டும் விநாயகரே
உற்றவரும் ஊரவரும் மேன்மையுற வாருமைய்யா
நற்கருணைப் பேரருளே நலங்கள் செய்யும் விநாயகரே
நாடியுந்தன் அடிபணிந்தோம் நலன்கள் தரவாருமைய்யா

தேரேறிப் பவனி வரும் திருமகனே விநாயகரே
தேச மெல்லாம் கருணை செய்ய விரைந்து நீ வாருமைய்யா
பாடிப் பணிந்துன்னை நாம் போற்றுகின்றோம் விநாயகரே
பாரினிலே எமக்கு நல்ல வாழ்வளிக்க வாருமைய்யா.

ஆக்கம்- த.மனோகரன்.
துணைத் தலைவர்,
அகில இலங்கை இந்து மாமன்றம்.

The post யாழ். கொழும்புத்துறை அருள்மிகு மன்றுளாடும் விநாயகப் பெருமான் திருக்கோயில் appeared first on Malayagam.lk.



Source link

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *