Colombo (News 1st) யாழ்ப்பாணம் – காரைநகர் கடற்பகுதியில் இந்திய மீனவர்கள் 08 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கடற்படையினரால் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது, இன்று(20) அதிகாலை ஒரு மணியளவில் இந்திய மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்திய மீனவர்களின் படகொன்றும் இதன்போது கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்டுள்ள இந்திய மீனவர்களை இன்று(20) காலை பொறுப்பேற்கவுள்ளதாக கடற்றொழில் திணைக்களத்தின் யாழ்.மாவட்ட உதவிப் பணிப்பாளர் ஜெயராஜசிங்கம் சுதாகரன் குறிப்பிட்டார்.
சட்ட நடவடிக்கைகளின் பின்னர், இந்திய மீனவர்கள் ஊர்காவற்துறை நீதவான் முன்னிலையில் ஆஜர்ப்படுத்தப்படுவார்கள் எனவும் அவர் தெரிவித்தார்.