வடமாகாணம்- யாழ்ப்பாண மாவட்டம் இணுவில் அருள்மிகு சிவகாமி அம்மன் திருக்கோயில்
சீர்மைமிகு நல்வாழ்வை அளிக்கின்ற தாயே
சீர்மை குன்றா பெருவாழ்வைத் தந்தருள வேண்டும்
சுதந்திரமாய் நாம் வாழ அருளளிப்பாய் அம்மா
இணுவிலில் கோயில் கொண்ட எங்கள் சிவகாமி அம்மா
வளம் கொண்ட தமிழ் மண்ணில் வந்துறையும் தாயே
வலுவுடனே வாழும் வழி தந்தருள வேண்டும்
சுகம் கொண்டு நாம் வாழ அருளளிப்பாய் அம்மா
இணுவிலில் கோயில் கொண்ட எங்கள் சிவகாமி அம்மா
நம்பிக்கை தந்தெம்மை ஆட்கொள்ளும் தாயே
நிம்மதி நிறைவுடைய வளவாழ்வைத் தந்தருள வேண்டும்
நிதானமாய் நாம் வாழ அருளளிப்பாய் அம்மா
இணுவிலில் கோயில் கொண்ட எங்கள் சிவகாமி அம்மா
தூயமனம் கொண்டோர் நெஞ்சம் உறைகின்ற தாயே
தெளிவான மனநிலையைத் தந்தருள வேண்டும்
துணிவு கொண்டு நாம் வாழ அருளளிப்பாய் அம்மா
இணுவிலில் கோயில் கொண்ட எங்கள் சிவகாமி அம்மா
அன்புடனே அரவணைத்து அருளளிக்கும் தாயே
திருப்தியுடன் வாழும் நல்ல வாழ்வினைத் தந்தருள வேண்டும்
துயரின்றி நாம் வாழ அருளளிப்பாய் அம்மா
இணுவிலில் கோயில் கொண்ட எங்கள் சிவகாமி அம்மா
தீராத பகை, நோய்கள் தீர்த்தருளும் தாயே
தொல்லையின்றி வாழும் நல்ல வாழ்வைத் தந்தருள வேண்டும்
திடங் கொண்ட மனதுடனே நாம் வாழ அருளளிப்பாய் அம்மா
இணுவிலில் கோயில் கொண்ட எங்கள் சிவகாமி அம்மா.
ஆக்கம்- த.மனோகரன்.
துணைத் தலைவர், அகில இலங்கை இந்து மாமன்றம்.
The post யாழ். இணுவில் – அருள்மிகு சிவகாமி அம்மன் திருக்கோயில் appeared first on Malayagam.lk.