Vijay - Favicon

முல்லைத்தீவு மக்களுக்கு உலக உணவுத் திட்டத்தினால் நிவாரணம்




Colombo (News 1st) பொருளாதார நெருக்கடியால் பாதிக்கப்பட்ட குடும்பங்களின் உணவு பாதுகாப்பை உறுதி செய்வதற்கான உலக உணவுத் திட்டத்தின் (WFP) நிவாரணம் வழங்கும் நடவடிக்கை இன்று முல்லைத்தீவில் ஆரம்பித்து வைக்கப்பட்டது.

முல்லைத்தீவு – கரைத்துறைப்பற்று பலநோக்கு கூட்டுறவு சங்கத்தின் தலைவர் ந.புகழ்வேந்தன் தலைமையில் இதற்கான நிகழ்வு நடைபெற்றது. 

இலங்கையில் உணவு பாதுகாப்பினை உறுதிப்படுத்தும் நோக்கில் உலக உணவுத் திட்டத்தினால் ஆரம்பிக்கப்பட்டுள்ள திட்டத்திற்கு முல்லைத்தீவு மாவட்டமும் தெரிவு செய்யப்பட்டுள்ளது.

முல்லைத்தீவு மாவட்டத்தில் 6 பிரதேச செயலாளர் பிரிவுகளில்  வாழும் 19,890 குடும்பங்களுக்கு உணவுப் பொதிகள் வழங்கி வைக்கப்பட்டுள்ளன.

நிகழ்வில் முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபர் க.விமலநாதன்,உலக உணவுத் திட்டத்தின் இலங்கைக்கான இணைப்பாளர் உள்ளிட்ட  பலர் கலந்துகொண்டனர்.

இதன்போது, அரிசி, பருப்பு, எண்ணெய் போன்ற உணவுப் பொருட்கள் பயனாளிகளுக்கு வழங்கி வைக்கப்பட்டுள்ளன.





Source link

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *