மலையகத்தின் அன்புக்கரங்கள் அமைப்பின் 100 வது செயற்திட்டம் 05.11.2022 அன்று ஹாலி எல ப/ரொக்கத்தன்ன தமிழ் வித்தியாலயத்தில் சிறப்பாக நடைபெற்றது.
இதன் போது தரம் 01 தொடக்கம் தரம் 05 வரையான மாணவர்களுக்கு பாடசாலை கற்றல் பொருள்கள் வழங்கி வைக்கப்பட்டது.
அத்துடன் அப் பாடசாலையின் கல்வி கற்பிக்கின்ற ஆசிரியர்களை கௌரவிக்கின்ற நிகழ்வும் மாணவர்களின் கலை நிகழ்ச்சிகளும் இடம்பெற்றது.
இந்நிகழ்வில் அமைப்பின் தலைவர் கிறிஸ்தோபர் தலைமையில் ஏனைய அங்கத்தவர்களான உப தலைவர் சிவா,
மகளீரணியின் தலைவி ராணி, ரொபின், உமா, மது, சிந்துஜன், இயேசுராஜா, புலோரா, கிறிஸ்னவேனி, சந்தியா, ஜெயந்தி, சோபா, கவிதா, கலைவாணி, ரேவதி, விஜயகுமாரி, தாஸ் ஆகியோர் கலந்து சிறப்பித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
இந்நிகழ்வின் புகைப்படங்கள் இங்கே..