Vijay - Favicon

மலாவி நாட்டில் பிரெட்டி சூறாவளி புயல், உயிரிந்தோரின் எண்ணிக்கை அதிகரிக்கலாம்


கிழக்கு ஆப்பிரிக்காவின் மலாவி நாட்டில் பிரெட்டி என்ற பருவகால சூறாவளி புயல் தாக்கியதால், தெற்கு பகுதியில் பலத்த பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

இதுகுறித்து மலாவியின் ‘தெற்கு மலாவியில் பெரு வெள்ளம் ஏற்படும். சூறாவளி புயலால் நேற்று பரவலாக பாதிப்பு ஏற்பட்டது’ என்று அந்நாட்டின் இயற்கை வளங்கள் மற்றும் பருவகால மாற்றங்களுக்கான அமைச்சகம் தெரிவித்துள்ளது.

ஆப்பிரிக்காவை சூறையாடிய பருவகால சூறாவளியால்  உயிரிந்தோரின்  எண்ணிக்கை 326-ஐ தாண்டியுள்ளதாகவும், நூற்றுக் கணக்கானவர்களைக் காணவில்லை என்றும், தெற்கு மலாவியில் நிலைமை மோசமடைந்து உள்ளதாகவும், பல பகுதிகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுவதாகவும், வீதிகள் மற்றும் பாலங்கள் துண்டிக்கப்பட்டுள்ளது.

பல இடங்களில் மின்சார விநியோகம் துண்டிக்கப்பட்டுள்ளதால் மக்கள் பாதிப்புக்கு ஆளாகி உள்ளனர்.இந்த நிலையில், பிளாண்டயர் அருகே புயலால் பேரழிவுக்குள்ளான பகுதியைப் பார்வையிடச் சென்ற அந்த நாட்டு ஜனாதிபதி லாசரஸ் சக்வேரா செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது, மழையினால் ஏற்பட்ட வெள்ளம், மண்சரிவுகளிலிருந்து மக்களை மீட்கவும், இறந்தவர்களின் உடலை மீட்கவும் உலகளாவிய உதவி தேவைப்படுகிறது.புயலால் அடித்துச் செல்லப்பட்ட வீடுகளின் இடிபாடுகளிலிருந்து அழுகிய உடல்களை மீட்புக் குழுவினர் மீட்டுவருகின்றனர். மேலும், உயிரிந்தோரின் எண்ணிக்கை அதிகரிக்கலாம் எனவும் அச்சப்படுகிறோம்’என்று தெரிவித்துள்ளார்.



Source link

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *