மட்டக்களப்பு – படுவாங்கரை, தாந்தாமலைப் பகுதியில் உயிரிழந்த நிலையில் காட்டுயானை ஒன்று மீட்கப்பட்டுள்ளது.
பிரதேச மக்கள் வழங்கிய தகவலுக்கு அமைய, வனஜீவராசிகள் திணைக்களத்தினர் குறித்த காட்டு யானையை மீட்டதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.
உயிரிழந்த யானை சுமார் 10 – 15 வயது மதிக்கத்தக்கதாகும்.
குறித்த யானை மரணித்தமைக்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை.