
வாகன விபத்தில் சிக்கி பலத்த காயமடைந்து கண்டி தேசிய வைத்தியசாலையின் அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வந்த பேராதனை பல்கலைக்கழக பல் வைத்திய பீடத்தின் மூன்றாம் வருட மாணவி உயிரிழந்துள்ளார்.
பல்கலைக்கழக ஹில்டா ஒபேசேகர மாணவர் விடுதிக்கு முன்பாக கடந்த 1 ஆம் திகதி இடம்பெற்ற இந்த விபத்தில் சிக்கி காயமடைந்த சசினி கலப்பதி (வயது 23) என்ற மாணவியே உயிரிழந்துள்ளார்.
இவர் தங்காலை பிரதேசத்தை வசிப்பிடமாகக் கொண்டவர் என பேராதனை பல்கலைக்கழக பிரதி உபவேந்தர் பேராசிரியர் டெரன்ஸ் மதுஜித் தெரிவித்துள்ளார்.
விபத்தில் உயிரிழந்த மாணவியுடன் பயணித்த மேலும் இரு மாணவிகளும் காயமடைந்துள்ளதுடன், அவர்கள் தற்போது குணமடைந்து வைத்தியசாலையில் இருந்து வெளியேறியுள்ளனர்.
மூன்று மாணவிகளும் பேராதனை பல்கலைக்கழக ஹில்டா ஒபேசேகர தங்கும் விடுதிக்கு சென்று கொண்டிருந்தபோது, கார் ஒன்றினால் இவர்கள் மோதப்பட்டமை குறிப்பிடத்தக்கது.