Vijay - Favicon

பெருந்தோட்ட கைத்தொழில்துறை வரலாற்றில் 3.8 பில்லியன் டொலர்கள் வருமானத்தை பெற்றுள்ளது.


பெருந்தோட்ட கைத்தொழில்துறை வரலாற்றில், கடந்த வருடம்  3.8 பில்லியன் டொலர்கள் வருமானத்தை பெற்றுள்ளது.

இது உண்மையானது. பொய் என்றால் தான் அமைச்சுப் பதவியை இராஜினாமா செய்வதாக பெருந்தோட்டக் கைத்தொழில் மற்றும் கைத்தொழில் அமைச்சர் கலாநிதி ரமேஷ் பத்திரன  (16) பாராளுமன்றத்தில் தெரிவவித்தார்.

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச 27/2 இன் கீழ் முன்வைத்த கேள்விக்கு பதிலளிக்கும் போதே அமைச்சர் இவ்வாறு குறிப்பிட்டார்.

இதன் போது இன்று தேயிலை தொழிற்சாலைகள் மூடப்பட்டுள்ளன என்பதை இல்லையென எவ்வாறு கூற முடியும் என்று எதிர்க்கட்சித் தலைவர் கேள்வி எழுப்பினார்.

இதற்கு பதிலளித்த அமைச்சர்…

பெருந்தோட்டக் கைத்தொழில்துறையின் வரலாற்றில அதிகூடிய வருமானம் கடந்த வருடம் பெறப்பட்டுள்ளது. . இது 3.8 பில்லியன் அமெரிக்க டொலர்களாகும். கொவிட் காலத்தில் ஒரு தேயிலை தொழிற்சாலையை கூட நாங்கள் மூடவில்லை. 2022ஆம் ஆண்டு உலகப்போர் நிலைமை காரணத்தினால் சந்தையில் சில சிக்கல்கள்; வரலாம். சில தேவைகள் குறைந்துள்ளன. பெருந்தோட்டக் கைத்தொழில் அபிவிருத்திக்கு அரசாங்கம் அனைத்து ஆதரவையும் வழங்கியுள்ளது. அதன் முடிவுகள் தரவுகளில் உள்ளன. நாட்டிற்கு வருமானம் கிடைத்துள்ளது. இந்த ஆண்டு நாம் 3.05 முதல் 4 பில்லியன் டொலர்கள் வரை வருமானம் எதிர்பார்க்கின்றோம். அவ்வாறு குறைவடைந்தால் அது எமது தவறில்லை. உலகில் காணப்படும் பொருளாதார வீழ்ச்சி,யுத்த சூழலினாலேயே ஏற்படுகின்றது என்று அமைச்சர் குறிப்பிட்டார்.

தரவுகள் காட்டப்பட்டுள்ளன. கடந்த வருடம் 299 மில்லியன் கிலோ தேயிலை உற்பத்தி செய்யப்பட்டது. இந்த வருடம் செப்டெம்பர் மாத இறுதிவரை தேயிலை உற்பத்தி 192 மில்லியன் கிலோவாக இருந்தது. இந்த தரவுகள் இலங்கையில் நடந்த தேயிலை ஏலத்தில் எடுக்கப்பட்டது என்றும் அமைச்சர் தெரிவித்தார்.

கைத்தொழில் துறை வளர்ச்சிக்கு எதிர்கட்சி ஆதரவை வழங்குங்கள். வரலாற்றில் தேயிலைக்கு அதிகூடிய விலை எமது காலத்தில் கிடைத்தது.  தேயிலை தொழிற்துறையின் பிரச்சினைகளை நேர்மறையாக பார்க்கிறோம். நமது தேயிலை தொழிலை குறைத்து மதிப்பிடாதீர்கள். பல காரணிகள் தேயிலையை பாதித்துள்ளன. இதைக் குறைத்து மதிப்பிட வேண்டாம் என்றும் அமைச்சர் குறிப்பிட்டார்.

 



Source link

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *