இலங்கை கிரிக்கெட் வீரரான தனுஷ்க குணதிலகவை உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் அனைத்து விதமான போட்டிகளில் இருந்தும் இடை நிறுத்துவதாகவும், அவரை எந்தத் தேர்விலும் கருத்தில் கொள்ளப்பட மாட்டார் எனவும் இலங்கை கிரிக்கெட் சபை அறிவித்துள்ளது.
மேலும் சிட்னி கிழக்கு ரோஸ் பே பகுதியைச் சேர்ந்த 29 வயதான யுவதி ஒருவரை பாலியல் வன்கொடுமை செய்தமை தொடர்பில் மேற்கொண்ட முறைப்பாட்டின் அடிப்படையில் தனுஷ்க குணதிலக்க கடந்த 06/11/22 அதிகாலை 01 மணியளவில் அவுஸ்திரேலிய பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த வழக்கில் அவருக்கு எதிராக குற்றம் நிரூபிக்கப்பட்டால், எவ்வித பாரபட்சம் இன்றி அவருக்கான தண்டனை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் இலங்கை கிரிக்கெட் சபை தெரிவித்துள்ளது.