India: COVID பெருந்தொற்று காரணமாக நிறுத்தப்பட்டிருந்த பாரத் கௌரவ் ( Bharat Gaurav) ஆன்மீக சுற்றுலா ரயில் சேவை மீள ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் இருந்து நேபாளம் ஊடாக 9 முக்கிய ஆன்மீக தலங்களுக்கு இந்த ரயில் சேவை முன்னெடுக்கப்படுகிறது.
பௌத்த தர்மம் மற்றும் புத்த பகவானுடன் தொடர்புடைய லும்பினி, புத்த கயா, சாரநாத் ,குஷிநகர் உள்ளிட்ட பகுதிகள் ஊடாக இந்த பயணம் முன்னெடுக்கப்படுகிறது.
7 இரவுகளும் 8 பகல்களும் அடங்கலாக, இந்த ரயில் பயணம் மார்ச் மாதம் 11 ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்டு
18 ஆம் திகதி டெல்லி சவ்தர்ஜங்க் ரயில்வே நிலையத்தை சென்றடையும்.
குளிரூட்டப்பட்ட முதலாவது – இரண்டாவது வகுப்புகளைக் கொண்ட ரயிலில், முதலாவது வகுப்பில் 96 பயணிகளும் இரண்டாவது வகுப்பில் 60 பயணிகளும் பயணிக்க முடியும்.