Colombo (News 1st) பல்வேறு குற்றச்சாட்டுகளுடன் தொடர்புடைய 05 சந்தேகநபர்கள் 03 வாள்களுடன் யாழ்ப்பாணம் – மானிப்பாய் பகுதியில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
நேற்று(18) பிற்பகல் முன்னெடுக்கப்பட்ட சோதனை நடவடிக்கையில் குறித்த சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டதுடன், அவர்களின் இரு மோட்டார் சைக்கிள்களும் கைப்பற்றப்பட்டுள்ளன.
கைது செய்யப்பட்டவர்களில் மூவர் மானிப்பாய் பகுதியை சேர்ந்தவர்கள் என்பதுடன் இருவர் வட்டுக்கோட்டை பகுதியை சேர்ந்தவர்கள் என பொலிஸார் கூறினர்.
20 முதல் 35 வயதுக்கிடைப்பட்டவர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.
குறித்த சந்தேகநபர்கள், பல்வேறு குற்றச்சாட்டுகளுடன் தொடர்புடையவர்கள் என்பது தெரியவந்துள்ளதுடன் தொடர்ந்தும் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.
இந்த சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை மானிப்பாய் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.