பலபிட்டிய நீதிமன்ற வளாகத்தை அண்மித்த பகுதியில் இன்று(26) காலை இடம்பெற்ற துப்பாக்கிப் பிரயோகத்தில் பிரதி அதிபர் ஒருவர் காயமடைந்துள்ளார். மோட்டார் சைக்கிளில் பயணித்த 2 பேர் துப்பாக்கி பிரயோகம் நடத்தியுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் சட்டத்தரணி நிஹால் தல்தூவ தெரிவித்தார். அம்பலாங்கொடையில் பாடசாலை ஒன்றில் பிரதி அதிபராக கடமையாற்றியவரே சம்பவத்தில் காயமடைந்துள்ளார். 44 வயதுடைய அவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சளர் குறிப்பிட்டார். சம்பவம் தொடர்பாக பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
The post பலபிட்டியவில் துப்பாக்கிச்சூடு ; பிரதி அதிபர் காயம் appeared first on Sri Lanka Tamil News – Newsfirst | News1st | newsfirst.lk | Breaking.