Vijay - Favicon

பருத்தித்துறை கடற்பரப்பில் கைதான 14 இந்திய மீனவர்களுக்கு விளக்கமறியல்




Colombo (News 1st) யாழ்ப்பாணம் – பருத்தித்துறை கடற்பரப்பில் கைது செய்யப்பட்ட இந்திய மீனவர்கள் 14 பேர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

இந்திய மீனவர்களை பருத்தித்துறை நீதவான் நீதிமன்றத்தில் இன்று பிற்பகல் ஆஜர்படுத்திய போது எதிர்வரும் 21 ஆம் திகதி வரை அவர்களை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

கைது செய்யப்பட்ட மீனவர்களில் 16 வயது சிறுவனும் அடங்கியுள்ளார்.

அவரையும் ஏனையவர்களுடன் சிறைச்சாலையில் வைப்பதற்கு அனுமதி கோரப்பட்ட நிலையில், நீதவான் அனுமதி வழங்கியுள்ளார்.

SEA OF SRILANKA எனப்படும் இலங்கை கடல் எல்லைக்குள் அத்துமீறி பிரவேசித்து பருத்தித்துறை கடற்பரப்பில் மீன்பிடியில் ஈடுபட்ட போது, இலங்கை கடற்படையினரால் நேற்றிரவு மீனவர்கள் 14 பேரும் கைது செய்யப்பட்டனர்.





Source link

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *