பண்டாரவளை பூனாகலை கபரகலை பகுதியில் மண்சரிவின் காரணமாக நான்கு லயன் குடியிருப்புகள் பகுதியிளவில் சேதமடைந்துள்ளன.
62 குடும்பங்களைச் சேர்ந்த 220 ற்கு மேற்பட்டோர் நிர்க்கதியான நிலையில் பூனாகலை இலக்கம் 3 தமிழ் வித்தியாலயத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளதோடு 7 பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
நேற்று இரவு பெய்த கடும் மழையின் காரணமாக பண்டாரவளை பூனாகலை கபரகலை தோட்டத்தில் மண் மேடு சரிந்து விழுந்ததில் நான்கு லயன் குடியிருப்புகள் பகுதியிளவில் சேதமடைந்துள்ளதோடு கபரகலை வைத்தியசாலையும் , வியாபார நிலையம் ஒன்றும் முற்றாக சேதமடைந்துள்ளது.
குறித்த அனர்த்தத்தில் 7 பேர் காயமடைந்த நிலையில் கொஸ்லந்த வைத்தியசாலையில் இருவரும் தியதலாவ வைத்தியசாலையில் ஐவருமாக ஏழ்வர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
அனர்த்தத்தில் எதுவித உயிர் சேதங்களும் ஏற்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
ராமு தனராஜா
The post பண்டாரவளை பூனாகலை கபரகலை பகுதியில் இடம்பெற்ற மண்சரிவினால் 7 பேர் வைத்தியசாலையில்; 220க்கும் மேற்பட்டோர் நிர்க்கதி! appeared first on Malayagam.lk.