
பசறை மொனராகலை பிரதான வீதியில் கமேவெல 4 ம் கட்டை ஆலயத்திற்கு அருகாமையில் நேற்று இரவு பெய்த கடும் மழையின் காரணமாக மண் மேட்டுடன் பாரிய கற்பாறை ஒன்று வீதியில் வீழ்ந்தமயினால் வீதியில் வாகன போக்குவரத்து ஒற்றை வழி போக்குவரத்தாக இடம்பெறுகின்றது.
எனவே வீதியில் பயணிக்கும் வாகன சாரதிகள் மிகவும் அவதானமாக பயணிக்குமாறு பசறை பொலிஸார் வேண்டுகோள் விடுகின்றனர்.
ராமு தனராஜா