Vijay - Favicon

பசறையில் இடம்பெற்ற உந்துருளி விபத்தில் 19வயதுடைய மகன் பலி தந்தை படுகாயம்.


பசறை பகுதியில் உந்துருளியும் லொறி ஒன்றும் நேருக்கு நேர் மோதியதில் 19 வயதுடைய கலபொட பகுதியை சேர்ந்த இளைஞர் ஒருவர் சம்பவ இடத்திலேயே பலியாகியுள்ளார்.

பசறை பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட பசறை மொனராகலை வீதி தொழும்புவத்தை 3 ஆம் கட்டைப் பகுதியில் பசறையில் இருந்து மொனராகலை நோக்கி சென்று கொண்டிருந்த லொறி ஒன்றும், மொனராகலையில் இருந்து பசறை நோக்கி வந்து கொண்டுயிருந்ந உந்துருளி ஒன்றும் நேருக்கு நேர் மோதியதில் உந்துருளி செலுத்தி சென்ற 19 வயதுடைய மீதும் பிடி கலபொட பகுதியை சேர்ந்த இளைஞர் ஒருவர் சம்பவ இடத்திலேயே பலியானார்.

உந்துருளியில் பின்னால் அமர்ந்து பயணித்த குறித்த இளைஞரின் தந்தை (வயது 50) பலத்த காயங்களுக்கு உள்ளான நிலையில் பசறை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் மேலதிக சிகிச்சைகளுக்காக பதுளை பொது வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டு அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வருகின்றார்.

மரணித்த 19 வயதுடைய இளைஞரின் சடலம் பசறை வைத்தியசாலை பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.

சம்பவம் குறித்து தெரியவருவதாவது பசறை பகுதியில் இருந்து மொனராகலை நோக்கி சென்று கொண்டிருந்த லொறி ஒன்றுக்கு முன்னால் சென்று கொண்டிருந்த லொறி ஒன்று வீதியின் நடுவில் நிறுத்தப்பட்டதால் பின்னால் சென்ற லொறி நிறுத்தி வைக்கப்பட்டிருந்த லொறியை முந்தி செல்ல முற்பட்ட வேளையிலேயே இவ்விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

சம்பவம் தொடர்பில் இரண்டு லொறிகளின் சாரதிகளும் பசறை பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சந்தேக நபர்கள் இருவரையும் நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக பொலிஸ் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

மேலதிக விசாரணைகளை பசறை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

 

ராமு தனராஜா



Source link

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *