Vijay - Favicon

நுவரெலியா மாவட்ட பொது வைத்தியசாலை ஊழியர்கள் போராட்டம்


வி.தீபன்ராஜ்

நுவரெலியா மாவட்ட பொது வைத்தியசாலை வைத்தியர்கள் , தாதி உத்தியோகத்தர்கள் அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் மற்றும் சிற்றூளியர்கள் என பலரும் இணைந்து பல்வேறு கோரிக்கைளை முன்வைத்து இன்று (03) பிற்பகல் வைத்தியசாலை பிரதான நுழைவாயில் முன்பாக கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.

போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் அத்தியாவசிய மருந்துகள் மற்றும் மருத்துவ உபகரணங்கள் உடனடியாக மக்களுக்கு கிடைக்க வழி செய்ய வேண்டும் , முறையற்ற நியமனத்தினை வழங்குவதை நிறுத்து , வாழ்வாதாரத்தினை அதிகரி , வங்கியில் அதிகரித்த வட்டி வீதத்தினை குறை , ஊழியர் பற்றாக்குறையினை உடன் நிவர்த்தி செய் ,வான் உயரத்தில் பண வீக்கம் நடுவீதியில் உத்தியோகஸ்தர்கள் போன்ற பல்வேறு வாசகங்களை தாங்கிய பதாதைகளை ஏந்தியவாறும் ,கோசங்களை எழுப்பியும் தமது எதிர்ப்பினை வெளியிட்டனர்.

தமது கோரிக்கைகள் நிறைவேற்றப்படாவிட்டால் இந்த போராட்டத்தினை அனைத்து சேவைகளையும் இடைநிறுத்தி பாரியளவில் முன்னெடுக்கப்போவதாக போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் தெரிவித்தனர்.

இப்போராட்டம் காரணமாக வைத்தியசாலை பணிகள் பாதிக்கப்பட்டுள்ளதுடன், நோயாளர்கள் சிரமத்துக்கு உள்ளாகியமை குறிப்பிடத்தக்கது .



Source link

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *