நானுஓயா நிருபர்
நுவரெலியா , நானுஓயா கிறிஸ்தவ தேவாலயங்களுக்கு விசேட பாதுகாப்பு
உலகவாழ் கிறிஸ்தவ மக்கள் இன்று உயிர்த்த ஞாயிறு தினத்தை அனுஷ்டிக்கின்றனர். இயேசு கிறிஸ்து சிலுவையில் அறையப்பட்டு மூன்றாம் நாள் உயிர்த்தெழுவதைக் குறிக்கும் தினமாக இந்த உயிர்த்த ஞாயிறு கிறிஸ்தவர்களினால் அனுட்டிக்கப்படுகிறது.
அந்த வகையில் நுவரெலியா மற்றும் நானுஓயா பிரதான நகரங்களில் உள்ள கிறிஸ்தவ தேவாலயங்களில் விசேட ஆராதனைகள் இடம்பெறுவதால், கிறிஸ்தவ தேவாலயங்களுக்கு விசேட பாதுகாப்பு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
2019ம் ஆண்டு உயிர்த்த ஞாயிறு தினம் ஒன்றில் கொடூரமான பயங்கரவாத தாக்குதல் இலங்கையில் இடம்பெற்றிருந்தது இதன் காரணமாக வழிபாடுகள் இடம்பெறும் கிறிஸ்தவ தேவாலயங்களுக்கு இவ்வாறு விசேட பாதுகாப்பு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது .