நானுஓயாவில் இருந்து நுவரெலியா ஊடாக ராகலை வரையான பிரித்தானிய கால ரயில் மார்க்கத்தை புனரமைக்க போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சு வெளிநாட்டு முதலீடுகளை நாடவுள்ளதாக அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.
31 கிலோமீற்றர் நீளமுள்ள குறுகிய ரயில் மார்க்கம் ஆங்கிலேயர் காலத்தில் நிர்மாணிக்கப்பட்டது. இருப்பினும், இது வணிக ரீதியாக நம்பகத்தன்மை இல்லாததால், பின்னர் பிரிட்டிஷ் ஆட்சியாளர்களால் அகற்றப்பட்டது.
BOT (கட்டமைத்தல், இயக்குதல், இடமாற்றம்) மாதிரியின் கீழ் இந்த ரயில் மார்க்கத்தை புனரமைக்க வெளிநாட்டு முதலீட்டாளர்களிடம் இருந்து ஆர்வத்தை வெளிப்படுத்துமாறு அரசாங்கம் அழைப்பு விடுக்கும் என அமைச்சர் தெரிவித்துள்ளார்.
உலகின் ஆறாவது மிக உயரமான ரயில் நிலையமான கந்தபொல இந்த ரயில் மார்க்கத்தில் அமைந்துள்ளது என்றார்.
இதன் ஊடாக சுற்றுலா வளர்ச்சிக்கு நிறைய வாய்ப்புகள் உள்ளதாகவும் அமைச்சர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.