தி. தர்வினேஷ்
நுவரெலியா மாவட்ட பொது வைத்தியசாலையின் இரத்த வங்கியில் ஏற்பட்டுள்ள குருதி தட்டுப்பாட்டை நிவர்த்தி செய்யும் முகமாக நுவரெலியாவில் வியாழக்கிழமை (10/11/22) இரத்ததான முகாம் இடம் பெற்றது.
நுவரெலியா கெலேகால கிராமத்தில் வாழும் விசேட தேவையுடையவர்கள் மற்றும் பெற்றோர்களின் சிவசக்தி நலன்புரி சங்கத்தினர் இணைந்து முழுமையான பங்களிப்புடன் குறித்த இரத்ததான முகாம் நுவரெலியா புதிய நகர சபை மண்டபத்தில் இடம் பெற்றது.
குறித்த இரத்ததான முகாமில் நுவரெலியா பிரதேசத்தைச் சேர்ந்த மகா சங்கரத்தினர், நுவரெலியா கெலேகால கிராமத்திலுள்ள விசேட தேவையுடைய பிள்ளைகள் மற்றும் பெற்றோர்கள் சங்க உறுப்பினர்கள் இளைஞர்கள், அரச, அரச சார்பற்ற நிறுவனங்களின் உத்தியோகத்தர்கள் என கலந்து கொண்டு தங்களது இரத்தங்களை தானம் செய்தனர்.
குறித்த இரத்ததான முகாமில் கலந்து கொண்டு இரத்ததான வழங்கியவர்களுக்கு பாராட்டுச் சன்றிதழ் வழங்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.
கடந்த காலங்களிலும் பல்வேறு சந்தர்ப்பங்களிலும் இவ்வாறான இரத்த தானம் மற்றும் ஏனைய சமூக நல நடவடிக்கைகளில் இவ் அமைப்பினர் ஈடுபட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.