பலாங்கொடை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நியு பெட்டிகல பிரதேசத்தில் இளைஞன் ஒருவரை கினிகத்ஹேன பொலிஸாரால் கைது செய்யப்பட்டார்.
நான்கு முச்சக்கர வண்டிகளை கினிகத்ஹேன பிரதேசத்தில் திருடிய குற்றச்சாட்டின் பெயரில் கினிகத்ஹேன பொலிஸார் பலாங்கொடையில் வைத்து கைது செய்துள்ளனர்.
இவர் முச்சக்கர வண்டிகளை திருடி அவற்றை மாற்றி விற்பனை செய்வதோடு, முச்சக்கர வண்டிகளை திருடி உதிரி பாகங்களை கழற்றி அவற்றின் நிறங்களை மாற்றி விற்பனை செய்த குற்றச்சாட்டின் பெயரில் கினிகத்ஹேன பொலிஸாரால் கைது செய்யப்பட்டார்.
இவர் தொடர்ந்தும் இந்த சம்பவத்தை செய்து வந்ததும் குறிப்பிடத்தக்கது.
மேலதிக விசாரணைகளை பலாங்கொடை மற்றும் கினிகத்ஹேன பொலிஸார் இணைந்து மேற்கொண்டு வருகின்றனர்.