Colombo (News 1st) பொருளாதார ஒத்துழைப்பு மற்றும் முதலீட்டை நோக்காகக் கொண்டு தொன்னாபிரிக்க ஜனாதிபதி சிறில் ரமபோசா மற்றும் ஜனாதிபதி ரணில் விக்கரமசிங்க இடையில் கலந்துரையாடல் இடம்பெற்றுள்ளது.
இந்தோனேசியாவில் இடம்பெற்ற G20 மாநாட்டில் பங்கேற்ற பின்னர் மீண்டும் தமது நாட்டிற்கு திரும்பும் வழியில் குறுகிய கால விஜயம் மேற்கொண்டு தென்னாபிரிக்க ஜனாதிபதி இலங்கைக்கு வருகை தந்திருந்தார்.
கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் தென்னாபிரிக்க ஜனாதிபதி சிறில் ரமபோசாவை வௌிவிவகார அமைச்சர் ஜனாதிபதி சட்டத்தரணி அலி சப்ரி வரவேற்றார்.
இதன் பின்னர் இரு நாட்டு ஜனாதிபதிகளும் கட்டுநாயக்க விமானப்படைத் தளத்தில் சந்தித்துள்ளனர்
நீடித்த நல்லிணக்கத்திற்காக நம்பகத்தன்மையுடன் கூடிய உண்மையைக் கண்டறியும் பொறிமுறையை நிறுவுவதற்கு தென்னாபிரிக்காவின் ஒத்துழைப்பைப் பெறுவது தொடர்பில் இதன்போது கவனம் செலுத்தப்பட்டுள்ளது.
இன்று (17) தனது 70 ஆவது பிறந்தநாளைக் கொண்டாடும் தென்னாபிரிக்க ஜனாதிபதிக்காக இந்த சந்திப்பின்போது பிறந்தநாள் கொண்டாட்ட நிகழ்வொன்றும் நடைபெற்றமை விசேட அம்சமாகும்.
தனது குறுகியகால விஜயத்தை நிறைவு செய்து தென்னாபிரிக்க ஜனாதிபதி இன்று அதிகாலை நாட்டிலிருந்து புறப்பட்டுச் சென்றார்.