கிழக்கு மாகாணம்- திருகோணமலை மாவட்டம், கன்னியா அருள்மிகு சிவன் திருக்கோயில்
ஆதிசிவன் திருக்கோயில் அமைந்த எங்கள் பூமி
ஆதரவு தந்தெம்மை ஆளுகின்ற பூமி
சிந்தையிலே உறைகின்ற சிவனார் உறைபூமி
கன்னியாவில் நம்மிறைவன் காட்சி தரும் பூமி
இராவணனின் தாயாருக்கிறுதி சடங்கு செய்யப்பட்ட பூமி
இன்றும் என்றும் எங்கள் உரிமையுடை உயர்ந்த நல்ல பூமி
என்றும் எங்கள் உரிமை சொல்லும் உத்தமனார் பூமி
கன்னியாவில் நம்மிறைவன் காட்சி தரும் பூமி
கோணேச நாதர் அருள்கொண்ட புனித நல்ல பூமி
கோணலில்லா நேர்வழியை அருளுகின்ற பூமி
கேடுகளைக் களைந்தெம்மை வாழவைக்கும் பூமி
கன்னியாவில் நம்மிறைவன் காட்சி தரும் பூமி
வெந்நீர் ஊற்றுகள் கொண்ட சிவனாரின் பூமி
ஆணவத்தை சிதைத்தழிக்கும் ஆண்டவனார் பூமி
அச்சம் தவிர்த்தெமக்கு ஏற்றம் தரும் பூமி கன்னியாவில் நம்மிறைவன் காட்சி தரும் பூமி
குளக்கோட்டன் ஆட்சி செய்த தமிழர்களின் பூமி
குறைவில்லா நிறைவுகளை அருளுகின்ற பூமி
கொட்டம் அடக்க வரும் இறை உறையும் பூமி
கன்னியாவில் நம்மிறைவன் காட்சி தரும் பூமி
உயிருக்குள் உயிரான சிவன் உறையும் பூமி
துன்பங்கள் துடைத் தெறிந்து உயர்வளிக்கும் பூமி
தொல்லைகளை நீக்க வரும் சிவனார் உறை பூமி
கன்னியாவில் நம்மிறைவன் காட்சி தரும் பூமி.
ஆக்கம்- த.மனோகரன்.
துணைத் தலைவர்,
அகில இலங்கை இந்து மாமன்றம்.