Colombo (News 1st) இலங்கை கிரிக்கெட் வீரர் தனுஷ்க குணத்திலக்க தொடர்பில் விசாரணைகளை முன்னெடுப்பதற்காக மூவரடங்கிய குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளதாக இலங்கை கிரிக்கெட் நிறுவனம் தெரிவித்துள்ளது.
ஓய்வு பெற்ற மேல் நீதிமன்ற நீதிபதி சிசிர ரத்நாயக்க தலைமையிலான விசாரணைக் குழுவில் சட்டத்தரணிகளான நிரோஷன பெரேரா மற்றும் அசல ரூகவ ஆகியோர் உள்ளடங்குகின்றனர்.
இலங்கை கிரிக்கெட் வீரர் தனுஷ்க குணதிலக்க அவுஸ்திரேலியாவின் சிட்னி நகரில் நேற்று முன்தினம்(06) கைது செய்யப்பட்டார்.
பாலியல் குற்றச்சாட்டு தொடர்பிலேயே அவர் கைது செய்யப்பட்டார்.
29 வயதான யுவதி ஒருவர் நிவூசவூத்வேல்ஸ் பொலிஸில் செய்த முறைப்பாட்டிற்கு அமைய தனுஷ்க குணதிலக்க கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.