Vijay - Favicon

தனுஷ்க குணதிலக்கவிற்கு பிணை – Newsfirst




Colombo(News 1st) பாலியல் குற்றச்சாட்டுகளின் பேரில் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த இலங்கை கிரிக்கட் வீரர் தனுஷ்க குணத்திலக்கவை 150,000 அவுஸ்திரேலிய டொலர் பிணையில் விடுவிப்பதற்கு சிட்னி நீதிமன்றம் தீர்மானித்துள்ளது.

தனுஷ்க குணத்திலக்கவிற்கு எதிராக முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளில் வழக்கை தொடர்வதற்கான வலுவான காரணங்கள் இல்லை என அவர் சார்பில் ஆஜரான சட்டத்தரணி முருகன் தங்கராஜ் சுட்டிக்காட்டியுள்ளார்.

இலங்கை கிரிக்கட் நிறுவனமும் இலங்கை அரசாங்கமும் தனுஷ்க குணத்திலக்கவிற்கு ஒத்துழைப்பு வழங்குவதாகவும் அவருக்கு பிணை வழங்கப்படாவிட்டால் அவரது கிரிக்கெட் வாழ்க்கை முடிவுக்கு வரலாமெனவும் சட்டத்தரணி தெரிவித்துள்ளார்.

இந்த விடயங்களை பரிசீலித்த நீதவான் 150,000 அவுஸ்திரேலிய டொலர் பிணையில் தனுஷ்க குணத்திலக்கவை விடுவிப்பதற்கு உத்தரவிட்டுள்ளார்.

பிணையில் விடுவிக்கப்பட்ட தனுஷ்க குணத்திலக்க தினமும் பொலிஸ் நிலையத்தில் ஆஜராக வேண்டுமென உத்தரவிடப்பட்டுள்ள நிலையில், தினமும் இரவு 09 மணி தொடக்கம் மறுநாள் காலை 06 மணி வரை பயணத் தடையும் விதிக்கப்பட்டுள்ளது. 

முறைப்பாட்டாளர் தரப்பு தொடர்பில் தொடர்புகளை பேணுவதற்கும் சந்திப்புகளுக்கான செயலிகளை பயன்படுத்தவும் தனுஷ்க குணத்திலக்கவிற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

தனுஷ்க குணத்திலக்க இன்று(17) Online ஊடாக நீதிமன்றத்தில் ஆஜரானார்.





Source link

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *