சர்வதேச மகளிர் தினத்தையொட்டி சென்றெகுலர்ஸ் விநோதயம் அறநெறி கல்வியகத்தின் ஏற்பாட்டில் இன்று மகளிருக்கான மென்பந்து கிரிக்கெட் சுற்றுப் போட்டி நடைபெற்றது.
போட்டி நிகழ்வில் பிரதம அதிதியாகவழக்கறிஞர் மாரிமுத்து பரமேஸ்வரி அவர்களும்
சிறப்பு விருந்தினர்களாக அடையாளம் அமைப்பின் மகளிர் பிரிவு பொறுப்பாளர்செல்வி ஐஸ்வர்யா,நு/எல்ஜின் தவி ஆசிரியைஇராசு பிரயதர்ஷினி,ஆகியோரும்விசேட விருந்தினர்களாக
அக்கரபத்தனை காவல் நிலைய உத்தியோகத்தர் திரு.மதியழகன்,நு/சென்றெகுலர்ஸ் தவி ஆசிரியர் திரு.ப.இரவிச்சந்திரன், சென்றெகுலர்ஸ் தோட்ட நிர்வாகத்தின் சார்பில் கள உத்தியோகத்தர்கள் சுரேஸ்,குணா ஆகியோரும் கலந்து சிறப்பித்தனர்.
இந்தப் போட்டியில்
சிங்கப் பெண்கள்
மலையகப் பெண்கள்,
குறிஞ்சி மலர்கள்,
அக்னி சிறகுகள்,
மலையகப் பெண்கள் என்ற நாமத்தை கொண்ட நான்கு அணிகள் பங்கு பற்றி இருந்தது.
போட்டியில் “சிங்கப் பெண்கள்” அணி முதலாவது இடத்தை பெற்று வெற்றி வாகை சூடியது.
சென்றெகுலர்ஸ் தோட்டத்தில் இடம்பெற்ற முதலாவது மகளிர் கிண்ண கிரிக்கெட் சுற்றுப் போட்டியாக இந்த போட்டி பதிவானது.
போட்டிக்கு பக்கபலமாக சென்றெகுலர்ஸ் கங்கா விளையாட்டு கழகம் இருந்து என்பது குறிப்பிடத்தக்கது.
(அ.ரெ.அருட்செல்வம்)