Colombo (News 1st) சீதுவ – கொட்டுகொட வீதியின் பஞ்சானந்த பாடசாலைக்கு அருகில் இடம்பெற்ற வாகன விபத்தொன்றில் தந்தையும் மகனும் உயிரிழந்துள்ளனர்.
வேன் ஒன்றும் மோட்டார் சைக்கிளொன்றும் ஒன்றுடனொன்று மோதி விபத்திற்குள்ளானதாக பொலிஸார் குறிப்பிட்டார்.
விபத்தில் 14 வயதான மகனும் 45 வயதான தந்தையுமே உயிரிழந்துள்ளனர்.
விபத்துடன் தொடர்புடைய வேன் சாரதி கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.