சித்திரைப் புத்தாண்டின் பின்னர் அமைச்சரவையில் மாற்றம் செய்யப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதன்போது சிறிலங்கா பொதுஜன பெரமுன, ஐக்கிய மக்கள் சக்தி மற்றும் பொதுஜனபெரமுனவில் இருந்து பிரிந்து சென்ற MP ஒருவர் என 10 பேர் புதிதாக அமைச்சர்களாகவுள்ளனர்.
சிறிலங்கா பொதுஜன பெரமுனவில் யார் அமைச்சு பதவியை எடுப்பது என்பது குறித்து இன்னும் இறுதி முடிவு எடுக்கப்படவில்லை என லங்காதீப செய்தி வெளியிட்டுள்ளது.
ஆயினும் அந்த கட்சியில் இருந்து 8 பேரின் விபரங்கள் அமைச்சு பதவிகளுக்காக ஜனாதிபதியிடம் கையளிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
ஐக்கிய மக்கள் சக்தியில் இருந்து ராஜித்த சேனாரத்ன அரசுடன் இணைந்து அமைச்சு பதவியை பெறுவார் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
The post சித்திரைப் புத்தாண்டின் பின்னர் அமைச்சரவையில் மாற்றம்? appeared first on Malayagam.lk.