மேல் மாகாணம் – கொழும்பு மாவட்டம், கொழும்பு மாநகரம் வெள்ளவத்தை – அருள்மிகு ஐஸ்வரியலட்சுமி தத்துவத் திருக்கோயில்
கொழும்பு மாநகரினிலே கோயில் கொண்ட தாயே
குறைவில்லா நிறை வாழ்வை அருளிடவே கருணை செய்வாய் அம்மா
நிம்மதியாய் நாமென்றும் நிலைபெற்று வாழ்ந்துவிட
கருணை செய்வாய், காத்தருள்வாய் ஐஸ்வரியலட்சுமித் தாயே
அன்பு கொண்டு அரவணைத்து ஆதரிக்கும் தாயே
அச்சமில்லா வளவாழ்வைப் பெற்றிடவே கருணை செய்வாய் அம்மா
மகிழ்வு கொண்டு நாமென்றும் நிலைபெற்று வாழ்ந்துவிட
கருணை செய்வாய், காத்தருள்வாய் ஐஸ்வரியலட்சுமித் தாயே
துன்பங்களைத் துடைத் தெறிந்து துயர் போக்கும் தாயே
துணிவு கொண்ட உயர் வாழ்வை அருளிடவே கருணை செய்வாய் அம்மா
தீயபகை நோய்களின்றி நாமென்றும் நிலைபெற்று வாழ்ந்துவிட
கருணை செய்வாய், காத்தருள்வாய் ஐஸ்வரியலட்சுமித் தாயே
முத்தேவியர் ஒருங்கமர்ந்து அருளுகின்ற தாயே
முன்னேற்றம் கொண்ட வாழ்வை அருளிடவே கருணை செய்வாய் அம்மா
முத்தமிழும் உயர்வுபெற நாமென்றும் நிலைபெற்று வாழ்ந்துவிட
கருணை செய்வாய், காத்தருள்வாய் ஐஸ்வரியலட்சுமித் தாயே
வளங் கொண்ட வாழ்வளித்து வாழவைக்கும் தாயே
வளம் நிறைந்த நல்வாழ்வை அருளிடவே கருணை செய்வாய் அம்மா
வறுமை பசிக் கொடுமையின்றி நாமென்றும் நிலைபெற்று வாழ்ந்துவிட
கருணை செய்வாய், காத்தருள்வாய் ஐஸ்வரியலட்சுமித் தாயே
நம்பிக்கை தந்தெம்மை வாழவைக்கும் தாயே
நீதியுடன் வாழும் நல்வாழ்வை அருளிடவே கருணை செய்வாய் அம்மா
நொந்து மனம் துவழும் நிலை இன்றி நாமென்றும் நிலைபெற்று வாழ்ந்துவிட
கருணை செய்வாய், காத்தருள்வாய் ஐஸ்வரியலட்சுமித் தாயே.
ஆக்கம்- த.மனோகரன்.
துணைத் தலைவர்,
அகில இலங்கை இந்து மாமன்றம்.