Vijay - Favicon

கொட்டாஞ்சேனை துப்பாக்கிச் சூட்டில் முச்சக்கரவண்டி திருத்துபவருக்கு காயம்


கொட்டாஞ்சேனை பரமானந்தா மாவத்தையில் நேற்று (18/03)இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.

படுகாயமடைந்த நபர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் சட்டத்தரணி நிஹால் தல்துவா தெரிவித்தார்.

துப்பாக்கிச் சூட்டில் முச்சக்கரவண்டி திருத்துபவர் (மெகனிக்) ஒருவர் காயமடைந்துள்ளதாக ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார்.

மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் கைத்துப்பாக்கியால் துப்பாக்கிச் சூடு நடத்தியதாக ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார்.

துப்பாக்கிச்சூடு நடந்ததற்கான சரியான காரணம் இதுவரை தெரியவரவில்லை.



Source link

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *