சப்பிரகமுவ மாகாணம், கேகாலை மாவட்டம், வறக்காப்பொலை அருள்மிகு முத்துமாரியம்மன் திருக்கோயில்
கருணையுள்ளம் கொண்டவளே முத்துமாரியம்மா
காத்தருள வந்திடுவாய் எங்களையே
குறைகளைந்து நிறையருளி வாழவைப்பாய்
வறக்காப்பொலையில் கோயில் கொண்ட தாயே முத்துமாரியம்மா
அருள் பொழியும் திருமுகத்தை உடையவனே முத்துமாரியம்மா
அணைத்தருள வந்திடுவாய் எங்களையே
வளமருளி நிம்மதியாய் வாழவைப்பாய்
வறக்காப்பொலையில் கோயில் கொண்ட தாயே முத்துமாரியம்மா
கேட்டவரம் தந்தெம்மை ஆட்சி கொள்ளும் முத்துமாரியம்மா
துணையிருந்து காத்தருள்வாய் எங்களையே
துயர்களைந்து மகிழ்வு தந்து வாழவைப்பாய்
வறக்காப்பொலையில் கோயில் கொண்ட தாயே முத்துமாரியம்மா
உற்றதுணையாயிருந்து உயர்வு தரும் முத்துமாரியம்மா
வலுவுடனே நாம் வாழ காத்தருள்வாய் எங்களையே
வற்றாத வளம் அருளி களிப்புடனே வாழவைப்பாய்
வறக்காப்பொலையில் கோயில் கொண்ட தாயே முத்துமாரியம்மா
சூலத்தைக் கையிலேந்தி துயர்களையும் முத்துமாரியம்மா
சூழ்ச்சிகள் அண்டாது காத்தருள்வாய் எங்களையே
சுற்றம் சூழ வாழ்வுதந்து வாழவைப்பாய்
வறக்காப்பொலையில் கோயில் கொண்ட தாயே முத்துமாரியம்மா
தானென்ற ஆணவத்தை அழித்தொழிக்க தோன்றுகின்ற முத்துமாரியம்மா
தீயகுணம் அண்டாது காத்தருள்வாய் எங்களையே
தூயவள வாழ்வுதந்து வாழவைப்பாய்
வறக்காப்பொலையில் கோயில் கொண்ட தாயே முத்துமாரியம்மா.
ஆக்கம்- த.மனோகரன்.
துணைத் தலைவர்,
அகில இலங்கை இந்து மாமன்றம்.