Vijay - Favicon

கிளிநொச்சி பளை – அருள்மிகு நரசிம்ம வைரவர் திருக்கோயில்


வடமாகாணம் – கிளிநொச்சி மாவட்டம், பளை அருள்மிகு நரசிம்ம வைரவர் திருக்கோயில்

நலம் தந்து காத்தருள விரைந்து வரும் வைரவரே
நிம்மதியைத் தந்தெமக்கு ஆறுதலைத் தாருமைய்யா
நொந்து மனம் வாடாமல் நிலைகுலையா திருந்திடவே
பளை நகரில் கோயில் கொண்ட வைரவரே உடனிருப்பாய்

துன்பம் களைந்து நம் துயர் போக்கும் வைரவரே
தூயவள வாழ்வு தந்து ஆறுதலைத் தாருமைய்யா
குறையின்றி நிறை வாழ்வு நித்தமும் பெற்றிடவே
பளை நகரில் கோயில் கொண்ட வைரவரே உடனிருப்பாய்

நரசிம்ம வைரவரென்ற நாமம் கொண்ட வைரவரே
அச்சம் தரும் கொடு நிலையை போக்கி எமக்காறுதலைத் தாருமைய்யா
ஒன்றுபட்டு வாழும் நிலை உறுதிபடச் செய்திடவே
பளை நகரில் கோயில் கொண்ட வைரவரே உடனிருப்பாய்

கொடுஞ் செயல்கள் புரிவோரை அடக்கவரும் வைரவரே
கொள்கை வழி நின்று நேர்மையாய் வாழ வழி தாருமைய்யா
நோய் நொடிகள் நெருங்காமை உறுதிபடச் செய்திடவே
பளை நகரில் கோயில் கொண்ட வைரவரே உடனிருப்பாய்

வெற்றியின் நாயகனாய் விளங்குகின்ற வைரவரே
வேதனை அண்டாத நிலைதந்து காப்பை நீ தாருமைய்யா
வெற்றிகளே என்றும் எமை வந்து சேர்ந்திடவே
பளை நகரில் கோயில் கொண்ட வைரவரே உடனிருப்பாய்

உத்தமர்கள் வாழ்வினையே உயர்த்திவிடும் வைரவரே
ஏற்றம் தந்தெமக்கு உயர் வாழ்வைத் தாருமைய்யா
தாழ்த்த நினைப்பவர்கள் தடம் தடுக்கி விழுந்துவிட
பளை நகரில் கோயில் கொண்ட வைரவரே உடனிருப்பாய்.

ஆக்கம்- த.மனோகரன்.
துணைத் தலைவர்,
அகில இலங்கை இந்து மாமன்றம்.



Source link

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *