கிளாசோ த.வி, நானுஓயா. வரலாற்றில் முதல் முறையாக சிறுவர் மெய்வல்லுனர் இல்ல விளையாட்டு போட்டி அதிபர் திருமதி சீதா தலைமையில் இன்று 07.04.2023 வெள்ளிக்கிழமை நடைப்பெற்றது.
நானுஓயா கிளாசோ தமிழ் வித்தியாலயத்தின் 2023 ம் ஆண்டுக்கான செயற்பட்டு மகிழ்வோம் விளையாட்டுப்போட்டி 07-04-2023 அதிபர் திருமதி சீதா இந்நிகழ்வில் அதீதியாக நுவரெலியா வலய கல்விப் பணிப்பாளர் திரு D.M.P லசந்த அபேரத்ன, கௌரவ அதீதிகள் ஆரம்பகல்வி ஆசிரிய ஆலோசகர் திரு.ராஜேந்திரன், தமிழ்மொழி பாட ஆசிரிய ஆலோசகர் திருமதி காஞ்சனா, நுவரெலியா வலய செயற்பட்டு மகிழ்வோம் பொறுப்பாளர் திரு.ஸ்டீபன், நலன்விரும்பியும் சமூக சேவகருமான திரு.T. ஸ்ரீ உதய பாஸ்கர் அயல் பாடசாலை அதிபர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்கள், பழைய மாணவர்கள் பங்குபற்றினர். இந்நிகழ்வில் மாணவர்களின் பல்வேறு விளையாட்டுக்கள் சிறப்பாக அமைந்திருந்தன. அத்தோடு மாணவர்களின் உடலியக்க செயற்பாடுகள் அனைவரையும் கவர்ந்திருந்தது. இந் நிகழ்வை சிறப்பாக ஒழுங்கமைத்த அதிபர் உட்பட ஆசிரியர்கள் யுகனேசன், C.தேன்மொழி,S. கௌசல்யா T.ஜானுபிரசன்னா, திவ்யா, E.நிலாந்தினி ஆகியோருக்கு நன்றிகளும் வாழ்த்துகளும். சிறப்பாக நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிய வாழ்த்துக்கள்.