Colombo (News 1st) மட்டக்களப்பு – காத்தான்குடியில் இடம்பெற்ற வாகன விபத்தில் 17 வயதான சிறுவனொருவன் உயிரிழந்துள்ளான்.
காத்தான்குடியிலிருந்து மட்டக்களப்பு நோக்கி பயணித்த சைக்கிளொன்று நாவற்குடா பகுதியில் வேனொன்றுடன் மோதியதில் இந்த விபத்து சம்பவித்துள்ளது.
விபத்தில் பலத்த காயமடைந்த சைக்கிள் ஓட்டுநர் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போது உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
விபத்துடன் தொடர்புடைய வேனின் சாரதி தப்பிச் சென்றுள்ளதுடன் மேலதிக விசாரணைகளை காத்தான்குடி பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.