Colombo (News 1st) கந்தக்காடு புனர்வாழ்வு நிலையத்தில் நேற்றிரவு(06) இரு தரப்பினரிடையே ஏற்பட்ட மோதலில் 75 தொடக்கம் 100 கைதிகள் தப்பிச்சென்றுள்ளதாக இராணுவம் தெரிவித்துள்ளது.
மோதலில் காயமடைந்த 05 பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன், அவர்களில் ஒருவர் இராணுவத்தை சேர்ந்தவர் என இராணுவ ஊடகப் பேச்சாளர் பிரிகேடியர் ரவீ ஹேரத் தெரிவித்துள்ளார்.
மோதலின் போது, கைதிகள் சிலர் ஆயுதக் களஞ்சியசாலைக்குள் செல்ல முயற்சித்துள்ளதாக இராணுவ ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார்.
சம்பவம் தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக புனர்வாழ்வு ஆணையாளர் நாயகம் குறிப்பிட்டார்.