Colombo (News 1st) கந்தகாடு புனர்வாழ்வு நிலையத்தில் ஏற்பட்ட மோதல் தொடர்பில் 201 கைதிகள் இன்று(07) கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் சட்டத்தரணி நிஹால் தல்தூவ தெரிவித்துள்ளார். கட்டடமொன்றை கைப்பற்றியிருந்த கைதிகள் பொலிஸாரிடம் சரணடைந்ததை அடுத்து கைது செய்யப்பட்டுள்ளனர். நேற்றைய(06) அமைதியின்மையின் போது தப்பிச்சென்ற 33 கைதிகளை தேடும் நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் ரவீ ஹேரத் தெரிவித்தார்.
The post கந்தகாடு புனர்வாழ்வு நிலைய மோதல்: 201 கைதிகள் கைது appeared first on Sri Lanka Tamil News – Newsfirst | News1st | newsfirst.lk | Breaking.